கோவை: கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் பிஜூ குமார் மகன் மிதுஜித்(20). இவர் கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மிதுஜித் உக்கடம் பெரிய குளக்கரை அருகே தனது நண்பர் ஒருவருக்கு டூ-வீலர் ஓட்ட கற்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மிதுஜித் மற்றும் அவரது நண்பரை மிரட்டி 2 செல்போன்களை பறித்து சென்றனர். இது குறித்து மிதுஜித் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், செல்போனை பறித்து சென்றது சவுரிபாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி(27), வெள்ளலூரை சேர்ந்த சயத் அபுதாகீர்(22) மற்றும் உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த பவுருதீன்(31) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.