ராகுல் காந்தி பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என NMO-Bharat டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மோடியும் ஜோ பைடனைப் போல் ஞாபக மறதியால் அவதிப்படுவதாக ராகுல் விமர்சித்து இருந்தார். ஒரு பொது மேடையில் ஒரு தலைவரின் இத்தகைய பேச்சு, உண்மையான நோயாளிகளின் புரிதல் மற்றும் சிகிச்சையை பாதிக்கக்கூடிய வகையில் பொது மக்களின் மனநிலையை மாற்றும் என டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.