தீபாவளியை ரங்கநாதர் வெகு விமர்சையாக கொண்டாடுவார். எண்ணெய் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிந்து ஆஸ்தான மண்டபத்திற்கு வருவார். அங்கு ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேள தாளங்கள் முழங்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கும் காட்சி நடைபெறும். இந்த காட்சியை கண்டு களிப்பவர்களுக்கு பண வரவுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படாது என்பதும், கடன் தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை.