தங்கம் விலை நேற்று (அக்.30) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தீபாவளி நாளான இன்று (அக்.31) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.49,120க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.