அறுவடை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்
உதகையில் இலையுதிர் காலத்தை வரவேற்கும் வகையில் பழங்கால பாரம்பரிய தாமஸ் ஆலயத்தில் இன்று (செப்.,08) அறுவடை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இலையுதிர் காலத்தை வரவேற்கும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் ஆலயங்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.,08) உதகையில் உள்ள பழமை வாய்ந்த பாரம்பரிய செயிண்ட் தாமஸ் ஆலயத்தில் ரெவரன் ஜெர்ரி ராஜ்குமார் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் அறுவடை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த அறுவடை திருவிழாவில் முதன் முறையாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், உணவுகள், பழங்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இதனை தொடர்ந்து ஆலயத்தில் பாடல்கள் பாடி சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.