நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது இந்நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஹிந்து முன்னணியினர் சார்பாக 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று 73 சிலைகள் மேளதாளங்களுடன் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து வாகனங்கள் மூலம் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு வழியாக கேரளா செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியம் முழங்க ஆண்கள் பெண்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டது.
இதனால் குன்னூர் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது