போட்டிகள் சுற்றுலாத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

85பார்த்தது
மலை மாவட்ட மான நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்காண மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு முழுவதும் இன்று முதலமைச்சர் கோப்பை காண போட்டிகள் துவங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கியது.

இப்போட்டிகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் மாவட்ட முழுவதிலும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, பேட்மிட்டன் ஆகிய போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

மேலும் நாளை குன்னூர் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளிடையே வாலிபால் போட்டிகளும், கூடலூர் பகுதியில் கபடி போட்டிகளும் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் கோப்பை காண துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவியா தண்ணீரு, மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் (பொறுப்பு) இந்திரா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி