வண்ணமயமாக உருவாக்கப்பட்ட நடைபாதை

54பார்த்தது
உதகை சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையில் உள்ள சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் நடப்பதற்காக வண்ணமயமாக உருவாக்கப்பட்ட நடைபாதையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் பார்வையிட்டனர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளதால் உள்நாடுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள் குறிப்பாக உதகை பகுதியில் அதிகமான சுற்றுலாத் தளங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அவ்வாறு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பலரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவும் இந்த சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையான சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் இதற்காக சாலையில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு வர்ணம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது
இந்த நடைபாதை அமைப்பதால் வியாபாரிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்களின் வரவேற்பை பொறுத்தே இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி