கோயம்புத்தூர் - Coimbatore

கெம்பட்டி காலனி: தங்க நகை பட்டறைகளை பார்வையிட்ட முதல்வர்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று கோவை நகரில் உள்ள தங்க நகை தயாரிப்பு பட்டறைகளுக்கு சென்று பார்வையிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின், கோவை தர்மராஜா கோயில் வீதி மற்றும் கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த பார்வையின் போது, அங்குள்ள பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பொற்கொல்லர்கள் தங்களது தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கினர். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வீடியோஸ்

கோயம்புத்தூர்
Nov 06, 2024, 02:11 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கெம்பட்டி காலனி: தங்க நகை பட்டறைகளை பார்வையிட்ட முதல்வர்!

Nov 06, 2024, 02:11 IST