தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். கொப்பரை தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் ஈ முதுமையைத் தாமதப்படுத்த உதவும். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. கொப்பரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ஞாபக சக்தியும் மேம்படும்.