கோயம்புத்தூர் - Coimbatore

கோவை: ஆன்லைன் முதலீட்டில் மோசடி

கோவை: ஆன்லைன் முதலீட்டில் மோசடி

கோவை வடவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (50) என்பவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர் சொந்தமாக தொழில் செய்ய முயன்று வந்த நிலையில், அவரது கைப்பேசிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த செய்தியில், ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் வேலை வாய்ப்பில் முதலீடு செய்தால் அதிக அளவில் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய கிருஷ்ணகுமார், குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு பல தவணைகளாக மொத்தம் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 15 ஆயிரத்தை கிருஷ்ணகுமார் செலுத்தினார். ஆனால், பணம் செலுத்தி 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி எந்த வருமானமும் வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணகுமார், இது குறித்து கோவை சைபர் குற்றப் பிரிவு போலீசில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகுமாரை ஏமாற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்