கோவை: பசுமைவழிச் சாலை திட்டங்களை கைவிட வேண்டும்!

83பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் பசுமைவழிச் சாலை திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மனு அளித்துள்ளனர். குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் நெடுஞ்சாலை மற்றும் கரூர் முதல் கோவை வரை அமைய உள்ள பசுமை வழிச் சாலை திட்டங்களை கைவிட வேண்டும் என்றும், இது குறித்து முதல்வர் ஆராய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் முருகசாமி பேசுகையில், குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் பைபாஸ் வரை உள்ள சாலையில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். சாலையை விரிவுபடுத்துவதற்காக ஏற்கனவே இடம் உள்ள நிலையில், கூடுதலாக விவசாய நிலத்தை எடுப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் முயற்சிக்கின்றனர். விவசாய நிலங்கள் மீது 3A போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர், அப்பகுதியில் சில தொழில்துறையினர் இடங்களை வாங்கியுள்ளனர். தொழில் துறையினரின் தேவைகளுக்காகவே சாலையை விரிவுபடுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவை வரும் முதல்வரை சந்திக்க அனுமதி வாங்கித் தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விவசாயிகள் குழு தெரிவித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி