கோவை: தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

66பார்த்தது
கோவை மக்கள் நேற்று புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பை சுவைத்தும் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி வேறுபாடுகளை களைந்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடினர். ஆண்டுதோறும் கொண்டாடும் தீபாவளிக்கான முன் ஏற்பாடுகள் வாரக்கணக்கில் செய்து வந்தாலும் அதன் ஞாபகங்கள், அடுத்த ஆண்டு வரை தொடரும் என்பது வழக்கம். அந்த வகையில், கோவை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் வகையில் தீபாவளி பண்டிகையை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி