
திருச்செங்கோடு: டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி விபத்து
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு மலையடிவார பாதை வேலுசாமி மண்டபம் அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். இவ்விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.