நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர், ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. இதில் நகர கழக செயலாளர் மா. அங்கமுத்து தலைமையில் ஜெ. ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிறந்த நாள் பேரணி நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது.