நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் சீனிவாசம் பாளையத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.