திருச்செங்கோடு: மாணவர் அணி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள, சூரியம்பாளையம் பகுதியில், திமுக மாணவர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. இதில் மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே அத்தகைய முயற்சி கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி