திருச்செங்கோடு: அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

53பார்த்தது
திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், சின்னஎலச்சிபாளையம், பனங்காட்டில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று 12.03.25 புதன்கிழமை இரவு பக்தர்கள் அலகுகுத்துதல், தீர்த்தகுடம், பால்குடம், அக்னிகரகம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து இன்று 13.03.25 வியாழக்கிழமை காலை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் கிடாவெட்டுதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை மாவிளக்கெடுத்தல், சிறப்பு அலங்காரத்துடன் சாமி ஊர்வலம் வருதல் மற்றும் வாணவேடிக்கை நடைபெறும். நாளை கம்பம் மற்றும் கும்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டுவிழா நடைபெறுள்ளது.

தொடர்புடைய செய்தி