சேந்தமங்கலம்: 50 கிலோ பாலத்தின் பைகள் பறிமுதல்
சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதி முழுவதும் நேற்று (நவம்பர் 14) காலை முதல் மாலை வரை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அப்பொழுது உள்ள அனைத்து கடைகளிலும் தீவிரமாக சோதனை செய்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், கறிக்கடைகள், பேன்சி ஸ்டோர் ஆகிய கடைகளில் இருந்து சுமார் 50 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.