நாமக்கல்: காவல் நிலையத்தில்  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு

54பார்த்தது
நாமக்கல் காவல் நிலையத்தில்  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் வாங்கவும், பட்டாசு, இனிப்புகள் வாங்கவும் பொதுமக்கள் அதிக அளவில் கடைவீதி பகுதியில் செவ்வாய், புதன்கிழமை குவிந்தனா்.

இதனைத் தொடா்ந்து, பேருந்து நிலையம், பரமத்தி சாலை, கடைவீதி, சேலம் சாலை ஆகிய பகுதியில் 50-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் பதிவுகளை நாமக்கல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான திரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை நேரடியாக ஆய்வு செய்தாா். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது, காவல் ஆய்வாளா் கு. கபிலன் உடனிருந்தாா். "

தொடர்புடைய செய்தி