கிணற்றில் தவறி விழுந்த 94 வயது முதியவர் பலி
வேலகவுண்டம்பட்டி பகுதியில் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி வயது (94). இவர் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது கிணற்றில் உள்ள கிளைகளை அகற்றுவதற்காக வெட்டும் பொழுது தவறி கிணற்றுக்குள் விழுந்து தலையில் படுகாயம் அடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.