துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை ரான்யா ராஷ் (32) பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக நகைகளை அணிந்திருந்த நடிகை ரான்யா ராவிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரான்யா ராவிடம் இருந்து நகை, தங்கக் கட்டி என மொத்தம் 14.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.