CT2025: அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் அரை சதத்தை தவறவிட்டார். 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் (8) மற்றும் ரோகித் ஷர்மா (28) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கோலி, ஐயர் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் 45 ரன்களில் போல்டானார்.