பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசாவின் மனசுல படம் தொடங்கி இவர் பல பல பாடங்களைப் பாடியிருக்கிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் கல்பனா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.