சென்னை: தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்ட நாதக, விசிக ஆகிய கட்சிகள் முதல்முறையாக பங்கேற்கின்றன. கூட்டத்தில், வாக்குச்சாவடி அளவில் நிலுவையில் உள்ள பிரச்சனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.