மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட செல்போன்களால் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கே ஆபத்து அதிகமாம். ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் இளம்பெண்களின் மனநலம் பாதிக்கப்படவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.