மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் விவசாயிகளின் வயல்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இதனால் எதிர்வரும் குறுவை சாகுபடி பணிகள் தாமதப்படும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.