மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் மீனவர் கிராமத்தில் உள்ள சுடுகாடு முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. கருவேல மரங்கள் மண்டிப் போய் முட்கள் நிறைந்து காணப்படுவதால் ஈமச்சடங்குகள் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். புதுப்பாளையம், கேசவன்பாளையம் போன்ற பெரிய கிராமங்கள் பயன்படுத்தும் இந்த சுடுகாட்டில் கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.