மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் பகுதியில் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.