மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் கழுமலை சாக்கடை ஆற்றில் குப்பைகள் சேர்ந்து குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.
இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே அந்த பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.