மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதி சீர்காழி நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்க புதிய தள்ளு வண்டியும் புதிய பிளாஸ்டிக் டப்பாவும் வழங்கப்பட்டது. கடந்த வாரம் ஊதிய உயர்வு குறித்த சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீர்காழியில் புதிய உபகரணங்கள் கிடைத்திருப்பதால் தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.