மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் அருகே கீரனூர் கிராமத்தில் அய்யனார் செல்லியம்மன் மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது.
இந்த கோவில்களில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் பக்தர்கள் தேரினை தலையில் சுமந்து சென்றனர்.