220 பேருக்கு பணி நியமன ஆணை

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பல பங்கு வகித்தனர். இந்த முகாமில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் தேர்வான 220 பேருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி