மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை: வராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை

மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் ராஜபத்ரகாளி, சந்தன கருப்பசாமி, வக்ரகாளி உள்ளிட்ட சுவாமிகளின் கோயில் உள்ளது. இக்கோயிலில் 26 அடி உயரத்தில் வராஹி அம்மனுக்கு பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மார்ச் 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய விழாவில், வியாழக்கிழமை சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், கோயில் பூசாரி வினோத்ராஜா 2 அரிவாள்களின் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்