மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு கடற்கரையில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடலில் குருடு ஆயில் எடுப்பதற்காக ஆங்காங்கே நங்கூரங்கள் இட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகள் மற்றும் வளைகள் சேதம் ஆகி மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.