மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் செட்டியார் கோவில் வீதியில் பின்புறம் உள்ள மூங்கில் காடுகள் வெயிலின் தாக்கத்தால் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.