மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் மங்கநல்லூர் அருகே வழுவூர் கிராமத்தில் இலங்கையில் நாயகி சமேத ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் குடமுழக்கு விழா வரும் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலின் திருப்பணிகள் செய்யப்பட்டு வழுவூர் கிராமம் முழுவதும் மாவிலை மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.