மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமை தாங்கினார். நகரத் தொண்டரணி பொறுப்பாளர் நடராஜன், மாணவரணி அறிவரசன், சீர்காழி நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்த வேண்டும் என்பது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.