மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளையல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உணவு பரிமாறி நிகழ்வை தொடங்கி வைத்தார். துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணைத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.