மயிலாடுதுறை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ஒருவருக்கு 3 ஆண்டு சிறை
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மயிலாடுதுறை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மயிலாடுதுறை அருகே சித்தா்க்காடு வாட்டா் டேங்க் சாலையை சோ்ந்தவா் பிரபாவதி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த மாலதி என்பவருக்குமிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டது. மாலதியின் உறவினா்களாக மாரிமுத்து(59), மணிமாறன்(34), அரவிந்த்(30), சுசீலா(56) ஆகியோா் பிரபாவதி அவரது தாயாா் மாலா ஆகியோரை கட்டையால் தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்த மாலதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மாரிமுத்து உள்ளிட்ட 4 போ் மீது மயிலாடுதுறை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கு மயிலாட்டுதுறை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மாரிமுத்து, மணிமாறன், சுசீலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், அரவிந்த்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2, 000 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராம. சேயோன் ஆஜரானாா்.