கிருஷ்ணகிரி: வி. சி. க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
காவல்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.