போச்சம்பள்ளி சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

56பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் சில தினங்களில் தீபாவளி வர உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது முதலே ஆடுகள் விற்பனை களைக்கட்டியாது
குறிப்பாக, ஞாயிறு தோறும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரந்தோறும் நடைபெறும் இந்தச் சந்தையில் தங்கம் முதல் தக்காளி வரை வரை வியாபாரம் நடைபெற்றது. இந்த நிலையில் போச்சம்பள்ளி வார ஆட்டு சந்தையில் தற்போது ஆடுகள் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை மக்கள் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்கள் கிருஷ்ணகிரி தர்மபுரி வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் தற்போது போச்சம்பள்ளியில் நடைபெற்று வரும் ஆட்டுச் சந்தையில் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வருகின்றனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், முன்னதாகவே வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வருவதால் தற்போது ஆடுகள் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக இன்று மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி