ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கொல்லப்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து இதனால் அப்பகுதி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகம் உள்ளே வர வழி இல்லாமல் வெளியே நின்றனர். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்.