கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்களின் ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 மாணவர்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் சென்று பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியும் செயல் விளக்கம் செய்து காட்டியும் நவீன தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் மிகுந்த மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சிக்கு டாக்டர் ராஜசேகர் மற்றும் உதவி பேராசிரியர் ஹரி மற்றும் வேளாண் உதவி இயக்குனர் எம். சிவநதி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் தொடக்கமாக வாழையில் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறையை செயல்முறையாக செய்து காட்டினர்.