ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா நடைபெறுகிறது, இவ்விழா பள்ளியின் அறக்கட்டளை தலைவர் பழனிவேல் தலைமையில், பள்ளியின் தாளாளர் சக்திவேல் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு விருந்தினராக ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, ஊற்றங்கரை தமிழ் சங்கம் இணை செயலாளர் கவிஞர் சாகுல் அமீத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியிலே உலகிற்கு வழிகாட்டும் அணையா விளக்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.