கிருஷ்ணகிரி: குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

63பார்த்தது
கிருஷ்ணகிரி: குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குவாரி குத்தகை விண்ணப்பதாரர்கள் குவாரி குத்தகை உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தகவல். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் இதர சிறுகனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான நடைமுறை 01.04.2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான https://www.mimas.tn.gov.in-ல் குவாரி குத்தகை உரிமம் தொடர்பான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பங்களுக்கு குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைனில் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.04.2025 முதல் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதற்கான பழைய நடைமுறை கைவிடப்பட்டு புதிய நடைமுறையான ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே, விண்ணப்பதாரர்கள் குவாரி குத்தகை உரிமம் பெற உரிய விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி