கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி. சி. ஆர் தினேஷ் ராஜன் தலைமையில், துணை அமைப்பாளர் இலயோலா ராஜசேகர். வரவேற்புரையில், ஒன்றிய செயலாளர்கள் ரஜினி செல்வம், எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், வசந்தரசு, நரசிம்மன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் உஷாராணி குமரேசன், விஜயலட்சுமி பெருமாள் ஆகியோர் முன்னிலையில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வு பாராபட்சம், தொகுதி மறு சீரமைப்பு அநீதி உள்ளிட்ட தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சிறப்புரையாற்றினர்.