கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024 - 2025 கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பர்கூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.