போச்சம்பள்ளியில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்

59பார்த்தது
தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பகிர்மான கழகம் சார்பில் மின் நுகர்வோர் சார்பில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மனுக்கள் மீது ஆய்வு செய்து தீர்வு காணப்பட்டது. 

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் ஸ்டாலின், சத்தியநாராயணமூர்த்தி, நாகராஜ், மகாலட்சுமி, உதவி பொறியாளர்கள் செல்வம், கார்மேக கண்ணன், ராமர், பெருமாள், சிவகுமார், அசோக், மோகன், விநாயகம், சீனிவாசன், சிவக்குமார், சரவணன் மற்றும் இளநிலை பொறியாளர்கள் வணிக ஆய்வாளர்கள் வணிக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி