விளவங்கோடு - Vilavengodu

குழித்துறை:  கஞ்சாவுடன் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

குழித்துறை: கஞ்சாவுடன் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பழைய பாலம் பகுதியில் நேற்று (அக்.,22) மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பைக் நிறுத்திவிட்டு சாலையோரம்  நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்று தெரிய வந்தது. இவர்களில் 18 வயது நபர்  நாகர்கோவில் பகுதியில் உள்ளது தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 17 வயது சிறுவன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது. சோதனையில் சிறுவனின் சட்டை பையில் 150 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதை அடுத்து இரண்டு பேரையும் மார்த்தாண்டம்  போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு மாணவர்களும் கஞ்சாவை தங்களது பயன்பாட்டிற்கு வாங்கி வந்தார்களா? அல்லது சக மாணவர்களுக்கு விற்பதற்காக கொண்டு வந்தார்களா?. என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా